இன்டர்போலின் தலைவராக சரவணன் நியமனம்!

சர்வதேச காவல்துறை எனப்படும் இன்டர்போலினது தலைவராகவும், குற்ற புலனாய்வுதுறையின் உதவி இயக்குனராகவும் மலேசிய தமிழரான சூப்ரிடெண்டன் சரவணன் கன்னியப்பன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சரவணனின் பதவியேற்பு நிகழ்வானது கடந்த வியாழக்கிழமை மலேசியாவின் புக்கிட் அமானில் இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசான் முன்னிலையில் சூப்ரிடென்ட் முகமட் பேரோஸ் இந்த நியமனத்தை வழங்கி வைத்துள்ளார்.

இதேவேளை இன்டர்போல் தேசிய மத்திய பணியகத்தின் தலைவர் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் உதவி இயக்குனர் பதவி சவால் நிறைந்ததாக இருந்தாலும் சிறந்த முறையில் இந்த பணியாற்றுவதற்கென  சரவணன் உறுதிபூண்டுள்ளார்.

மலேசியாவின் சித்தியவான் ஆயர் தாவார் தமிழ்ப் பள்ளியில் தமது தொடக்க கல்வியை தொடங்கிய சரவணன், யு.பி.எம் எனப்படும் மலேசிய புத்ரா பல்கலைக்கத்தில் பட்டம் பெற்று பின்னர் லண்டனில் தடயவியல் துறையில் முதுகலை மற்றும் பி.எச்.டி பட்டத்தை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.