இன்றும் 3ஆயிரம் பேருக்கு கொரோனா! 94பேர் உயிரிழந்தனர்!

இன்றைய தினத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 956 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 3 இலட்சத்து 29 ஆயிரத்து 994 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு 2 ஆயிரத்து 563 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து இதுவரை தொற்றில் இருந்து பூரணமாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 93 ஆயிரத்து 357 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை மேலும் 94 பேர் தொற்றால் உயிரிழந்ததை அடுத்து தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது 31 ஆயிரத்து 526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.