இளைஞன் மீது பல பெண்கள் தாக்குதல்! தற்கொலை செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம் – நாவாந்துறை, கண்ணாபுரத்தில் இளைஞன் ஒருவரை பல பெண்கள் சேர்ந்து மிக மோசமான முறையில் மூர்க்கத்தனமாக தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

புவனேந்திரராசா சுகந்தன்(வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்தவராவார்.

புறா வளர்ப்பில் இளைஞர்களிற்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து குறித்த இளைஞனை பெண்கள் பிடித்து தாக்கி, முகத்தில் மிளகாய்த்தூள் வீசி, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் ஏற்பட்ட அவமானத்தால் அந்த இளைஞன் தற்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புறா பிடிப்பதற்காக 20வயதுடைய இளைஞர் ஒருவர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த இளைஞர்
இச்ந்த சம்பவத்தின் பின்னர் மனமுடைந்திருந்த பாதிக்கப்பட்ட இளைஞன் 26ம் திகதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரின் மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலை ஊடாக, யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்திற்கு கையளிக்கப்பட்ட நிலையிலே குறித்த இளைஞனுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.