ஜனாதிபதியின் முடிவால் வாகன விற்பனையில் ஏற்பட்ட மாற்றம்!

இப்பொழுது இலங்கையில் வாகன விற்பனை மிகவும் பாரியளவில் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டதை அடுத்து பதிவு செய்யப்பட்ட வாகனங்களது விலை எதிர்பார்த்திராத அளவு அதிகரித்து இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன உரிமையாளர்கள் தம்மிடம் உள்ள வாகனங்களை இணையத்தளங்கள் ஊடாக விற்பனை செய்ய முயற்சிப்பதே இதற்கு காரணம் ஆகும்.

இவ்வாறு விற்பனை செய்யப்படுகின்ற பதிவு செய்யப்பட்ட வாகனங்களது விலைகள் நியாயமற்ற முறையில் இருப்பதால் மக்களது வாகன ஆசை கனவாகவே உள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உதாரணத்திற்கு 2016இல் தயாரிக்கப்பட்ட விட்ஸ் மோட்டார் வாகனம் இலங்கையில் 76 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2019ஆம் தயாரிக்கப்பட்ட விட்ஸ் மோட்டார் வாகனம் ஒன்று ஜப்பான் நாட்டு இணையத்தளம் ஒன்றில் 10 ஆயிரத்து 730 அமெரிக்க டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் இலங்கை பெறுமதி 21 இலட்சத்தி 78 ஆயிரத்தி 190 ரூபாயாகும்.

அந்த மோட்டார் வாகனத்தின் விலையுடன், கப்பல் கட்டணம் மற்றும் காப்புறுதி கட்டணத்தை சேர்த்தால் அதன் பெறுமதி 24 இலட்சத்தி 92 ஆயிரத்து 637 ரூபாயாகும்.

அதற்கு அமைவாக 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விட்ஸ் மோட்டார் வாகனம் 51 இலட்சத்தி 57 ஆயிரத்தி 363 ரூபாய் அதிகமாக அறவிடப்படுவதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.