பயணத்தடை தீர்மானத்தில் மாற்றம் வரலாம்!

பயணத்தடையினை நீடிக்க வேண்டுமென சுகாதார அதிகாரிகளின் வலியுறுத்தல்களுக்கு அமைவாக பயணத்தடை தளர்த்தப்படும் தீர்மானங்களில் மாற்றம் வரலாமென கொரோனா தடுப்பு செயலணி தலைவர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதுவரை இது குறித்து எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர் பயணக்கட்டுப்பாட்டை விதிக்குமாறு பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வந்த நிலையில் மக்களை கருத்தில் கொண்டு பயணகட்டுப்பாட்டில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

25ஆம் திகதி பயணத்தடை எடுக்கப்பட்ட தினமன்று மக்கள் அவதிப்பட்டு செயற்பட்டனர்.

எனினும் நாம் மக்களை குறை கூறுவதற்கு விரும்பவில்லை. எமது நாட்டு மக்கள் பொறுமையுடன் எமக்கான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

நாட்டின் நிலைமைகளை வைத்திய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

தற்போதைய முடிவுகளின் படி 7ம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.