பெண் வைத்தியர் குளிக்கும் போது மறைந்திருந்து வீடியோ எடுத்த வைத்தியர் விளக்கமறியலில்!

கொழும்பு, ராகம வைத்தியசாலையில் பணிபுரியும் இளம்பெண் வைத்தியர் குளித்து விட்டு வரும் போது நிர்வாணமாக படம் பிடித்த ஆண் வைத்தியர் ஒருவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெண் வைத்தியர் மீதிருந்த காதல் மயக்கத்திலேயே இதனை செய்ததாக குறித்த ஆண்வைத்தியர் கூறியுள்ளார். ஆண் வைத்தியரும் பெண் வைத்தியரும் மருத்துவ கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 35 வயதான ஆண் வைத்தியர் ராகம வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் கழித்து அதே வைத்தியசாலையில் பெண் வைத்தியர் இணைந்துள்ளார்.

இதன்போது இளம் வைத்தியரின் அழகில் மயங்கி, காதல் வலை வீச முயன்றுள்ளார். எனினும், இந்தகாதல் வலைகளை பெண் வைத்தியர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஆண் வைத்தியர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மனதிலிருந்த காதலியை விட்டு செல்வது அவருக்கு சிரமமாக இருந்தது. எனினும், வேறு வழியின்றி மாற்றாகி சென்றுள்ளார்.

கொழும்பிற்கு மாற்ற பின், அடிக்கடி தொலைபேசியில் பெண் வைத்தியரை அழைத்து பேசி தொந்தரவு செய்ததோடு, ராகம வைத்தியசாலைக்கு அடிக்கடி எந்த பணியுமில்லாமல் சென்று, எதிர்பாராத விதமாக சந்திப்பதை போல பெண் வைத்தியரின் முன்பாக சென்று வருவார்.

இப்படி பலவித்தைகளை காட்டியும் பெண் வைத்தியரின் மனதில் இடம்பிடிக்க முடியாமல் திண்டாடிவந்துள்ளார்.

நாளுக்கு நாள் அந்த பெண் வைத்தியரின் மீதான காதலும், காமமும் அதிகரித்து, தன்னை கட்டுப்படுத்த முடியாதவராக மாறினார். காதலை சொல்லி முடிவெடுக்க வேண்டுமென, கடந்த 10ஆம் திகதி இரவு 8 மணிக்கு பின் பெண் வைத்தியரது விடுதிக்கு சென்றார்.

அப்போது பெண் வைத்தியர் விடுதிக்கு திரும்பி, தனது ஆடைகளை களைந்து விட்டு குளிக்கச் சென்றார். தனி விடுதி என்பதால், குளித்து விட்டு நிர்வாண நிலையிலேயே வெளியில் வந்துள்ளார்.

மறைந்திருந்து வீடியோ எடுத்த வைத்தியர்

விடுதியின் ஜன்னலோரம் மறைந்து நின்று இவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஆண் வைத்தியர், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாணமாக வந்த பெண் வைத்தியரை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்தார்.

இதன்போது தடுமாற்றத்தில் தட்டுப்பட்டு, சிறிய சத்தம் எழுந்தது. அதன் பின் பெண் வைத்தியர் ஜன்னல் பக்கம் பார்த்த போது கையடக்க தொலைபேசியை வைத்து கொண்டிருப்பது யாரோ நிற்பது தெரிந்தது.

துண்டால் உடலை மறைத்து கொண்டு நெருங்கிச் சென்று பார்த்தார். தனக்கு தெரிந்த வைத்தியர்! அறைக்குள் சென்று துணியொன்றால் உடலை மூடிகொண்டு வந்து, கையடக்க தொலை பேசியில் படம் எடுத்தாரா என வினவினார். ஆண் வைத்தியர் மறுத்தார்.

கையடக்க தொலைபேசியை பறித்து பார்த்த போது புகைப்படங்களை பெண் வைத்தியரால் மீட்க முடியவில்லை. பின் புகைப்படம் எடுத்ததை ஒப்புக் கொண்ட ஆண் வைத்தியர், தன்னை காதலித்தால் அவற்றை அழிப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன், அவரது நிர்வாணத்தை தான் தினமும் பார்க்க வேண்டுமென நிதானம் இழந்து பேசியுள்ளார். பெண் வைத்தியர் பல முறை கெஞ்சியும், அதை கணக்கில் எடுக்காமல் அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்.

இதை அடுத்து பெண் வைத்தியர் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததை அடுத்து ஆண் வைத்தியர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டன. அவற்றில் பெண்களின் அந்தரங்கப்படங்கள் காணப்பட்டன.

குறித்த ஆண் வைத்தியர் தம்மையும் அந்தரங்கமாக புகைப்படம் எடுத்ததாக வேறு இரு பெண்களும் முறைப்பாடு செய்திருந்தனர்.

ஆண் வைத்தியர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.