மாம்பழம் சாப்பிட்ட பிறகு இத சாப்பிடாதீங்க! மீறின நடக்கும் விபரீதம்!

மாம்பழம் சாப்பிடுறதால பல நன்மைகள் கிடைக்குது, ஆனா மாம்பழத்தை சாப்பிட்டா பிறகு சில சாப்பாட்டை சாப்பிடுறத தவிக்கிறது நல்லது.

இல்லாவிட்டா சில உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

மாம்பழம் சாப்பிட்ட உடன தண்ணீர் குடிக்கிறத தவிர்க்க வேண்டும். அப்பிடி தண்ணீர் குடிச்சா உடம்பில எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திவிடும். வயிற்றுவலி, அசிடிட்டி, வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

மாம்பழம் சாப்பிட்ட பிறகு அரை மணிநேரம் கழித்து வேண்டுமானால் தண்ணீர் பருகலாம். சிலர் மாம்பழ துண்டுகளுடன் தயிர் கலந்து சாப்பிடுவார்கள். அது ருசியாகவும் இருக்கும். இருப்பினும் மாம்பழம் வெப்பமானது, தயிர் குளிர்ச்சியானது.

அதனால் உடலில் வெப்பத்தையும், குளிரையும் ஒருசேர உருவாக்கும் போது சரும பிரச்சினைக்கு வழிவகுக்கும். மாம்பழம் சாப்பிட்ட உடனேயே கசப்பு தன்மை கொண்ட எந்த பொருளையும் சாப்பிடக்கூடாது.

குறிப்பாக பாகற்காய் போன்ற உணவுகளை சாப்பிடும் போது குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும்.

அவை வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சருமத்தில் எதிர் மறையான தாக்கத்தையும் உண்டாக்கும். முகப்பரு தோன்றுவதற்கும் வழிவகுக்கும்.

குளிர் பானங்களுடன் மாம்பழம் சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் இருக்கிறது. குளிர் பானங்களிலும் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும்.

குறிப்பா நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.