வியாழேந்திரனின் வீட்டில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் ஆதரவாளர்! வெளிவந்த உண்மை!

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சொகுசு பங்களாவின் முன்பு சுட்டு கொல்லப்பட்ட இளைஞன் ஜனாதிபதி கோட்டாபாயவின் கட்சி உறுப்பினர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவ அட்டையினை அந்த இளைஞன் வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

0002113531 எனும் இலக்கத்தை உடைய பெரமுனவின் அங்கத்துவ அட்டையினை அந்த இளைஞன் வைத்திருந்துள்ளார்.

கொல்லப்பட்டவரது மரண பரிசோதனை புகைப்படங்களும்  வெளியாகியுள்ளன.

புகைப்படத்தின் அடிப்படையில் சுட்டு கொல்லப்பட்ட இளைஞன் அருகில் வைத்து தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதை அவதானிக்க  முடிகின்றது.

‘இக்கொலையானது திட்டமிடப்பட்ட படுகொலையா’ எனும் கோணத்தில்  விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கும்  கௌரவ இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் ஏதெனும் தொடர்பு உள்ளதா எனும் விதத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என  மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.