வீட்டில் புகுந்த கும்பலால் ஒரு கோடியே 45இலட்சம் சேதம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (27) முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்த இனம் தெரியாத 7 பேர் வீட்டில் இருந்தவர்கள் மீது வாளால் வெட்டியதுடன் அங்கிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இதன் போது சுமார் ஒரு கோடியே 45இலட்சம் வரை சேதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனமொன்றுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது

கள்ளப்பாட்டு பகுதியில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் இனம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

அதன் பின் வீட்டில் இருந்த வாகனங்களின் மீதும் தாக்குதலை நடத்தி சேதப்படுத்தி உள்ளனர்.

இதன் போது சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான சொகுசு காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதில் கே டி எச் ரக வாகனம் ஒன்று சேதமடைந்ததோடு சொகுசு கார் ஒன்றும் முற்றாக எரிந்துள்ளது.

இதில் வாள் வெட்டிற்கு இலக்கான ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அத்துடன் முல்லைத்தீவு தடயவியல் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் சோதனைகளை நடத்தியதோடு வீட்டிலிருந்த சி.சி.ரி.வி காணொளி ஆதாரங்களுடன் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தாக்குதலை நடத்தியவர்களால் சி.சி.ரி.வி கமராக்கள் 2 சேதமாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.