கனடாவிலிருந்து யாழ் வந்து 18 வயது மாணவியை கர்ப்பமாகிய 47 வயது அங்கிள்!! வங்கி உத்தியோத்தரான தாயுடனும் உறவு!!

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 47 வயதான மன்மதனால் மாணவி ஒருவர் கர்ப்பமாகியுள்ளார். யாழ் தென்மராட்சிப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவரை விட்டுப் பிரிந்து வாழும் தனியார் வங்கி ஒன்றின் பெண் உத்தியோகத்தரின் மகளே இவ்வாறு கர்ப்பமாகியுள்ளார்.

குறித்த பெண் உத்தியோகத்தரின் உறவினரான கனடாவில் வசிக்கும் குடும்பஸ்தரே இக் கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவருகின்றது. கனடாவிலிருந்து வந்து மாணவியின் வீட்டிலேயே குறித்த நபர் பல தடவைகள் இரவிலும் தங்கியிருந்துள்ளார்.

அத்துடன் சொகுசு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தாய் வங்கிக்கு சென்ற நேரத்திலும் மாணவியுடன் உல்லாசமாகத் திரிந்துள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தைப்பூசத்தினத்தில் கோயிலில் நடந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொண்ட குறித்த மாணவி சாப்பிட்டு முடித்ததும் வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். இதனால் கோயிலில் கூடியிருந்த மாணவியின் அயலவர்கள் மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே மாணவி கர்ப்பமான விடயம் அவர்களுக்கு தெரிந்துள்ளது.

மாணவி மயக்கமடைந்த செய்தி தாயாருக்கு தெரிவிக்கப்பட்டு தாயாரும் வைத்தியசாலைக்கு வந்துள்ளார். அதன் பின்னர் நடந்த விசாரணைகளின் போது மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் கனடா அங்கிள் என தெரியவந்துள்ளது.

அயலவர்களின் தகவலின்படி தாயார் மோசமான நடத்தையுடையவர் என்றும், அதனாலேயே அவரை விட்டு கணவர் பிரிந்து சென்றார் என்றும் தெரியவருகின்றது. குறித்த கனடா அங்கிள் அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் மாணவியின் தாயாரின் மாமா மகன் எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபர், மாணவியின் தாயாருடன் திருமணத்திற்கு முன்னரே தவறான உறவில் ஈடுபட்டுவந்ததாகவும் அதன் காரணமாக மாணவியின் பாட்டா குறித்த நபரை கடுமையாக தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.