4 கிலோ கஞ்சா வாகனத்துடன் கிளிநொச்சியில் ஒருவன் கைது!

கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை 4 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து கஞ்சா கடத்தி செல்லப்படுவது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

புலனாய்வு பிரிவினரும், கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினரும் அவர்களது புலனாய்வு பிரிவினரும், போதைப்பொருள் கொண்டு சென்ற வாகனத்தை பின் தொடர்ந்த நிலையில், வாகனம் முறிகண்டி பகுதியில் உள்ள வசந்தநகர் பிரதான வீதியில் திரும்பியுள்ளது.

வாகனத்தை இடை மறித்து சோதனையிட்ட வேளை சாரதி உள்ளிட்ட இருவர் தப்பி சென்ற நிலையில், வாகனத்தில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் வாகனத்தை சோதனையிட்ட போது, சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட இரண்டு கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

குறித்த பொதியில் காணப்பட்ட கஞ்சா சுமார் 4 கிலோவிற்கு அதிக எடை கொண்டது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா பொதியையும், கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், கைதான சந்தேகநபரையும் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், மேற்கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

தப்பி சென்ற இரு சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் கூட்டாக ஈடுபட்டு வருகின்றனர்.

May be an image of 1 person and carMay be an image of 4 people and text

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.