யாழ்ப்பாணத்தில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தர்க்கம் கொலையில் முடிந்தது!

யாழ்ப்பாணத்தில் , உறவினர்களான அயலவர்கள் இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இருவர் இடையே ஏற்பட்ட வாய்தர்க்கமே இறுதியில் கொலையில் முடிவடைந்தது.

சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே இதில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , அயலவர்களான உறவினர்கள் இருவருக்கு இடையில் கோழி வளர்ப்பினால் பிரச்சனைகள் நிலவி வந்துள்ளன.

இந்நிலையில் வாய் தர்க்கம் முற்றி கத்திக்குத்தில் முடிவடைந்தது. இதில் கத்தி குத்திற்கு இலக்கான நபர் உயிரிழந்ததை அடுத்து , கொலை சந்தேகநபரான 57 வயதுடைய அயலவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை சுன்னாகம் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.