யாழில் பேருந்து விபத்து – 08 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்கு உள்ளாகியது

இதில் 08 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகரினை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் , தனியார் பேருந்தும் மோதியே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.