இலங்கையில் அடிக்கடி வெடிக்கிறது சிலிண்டர்கள்! பதற்றத்தில் மக்கள்!

பன்னிப்பிட்டி-கொட்டாவ பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த வெடிப்பு சம்பவமானது எரிவாயு சிலிண்டர் வெடித்தமையினால் ஏற்பட்டு இருக்குமென கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை நடைபெற்ற இவ்வெடிப்பு சம்பவத்தால் குறித்த வீடு பலத்த சேதங்களிற்கு உள்ளாகி உள்ளதோடு, இச்சம்பவத்தில் வீட்டில் வசிக்கும் எவறிற்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இம்மாதத்தில் மட்டும் நாட்டின் பல பகுதிகளிலும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து  சிதறும் சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

கடந்த நவம்பர் 04ம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர்.

நவம்பர் 16ம் திகதி, இரத்தினபுரியில் உள்ள உணவகத்தில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும், விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

நவம்பர் 20 ஆம் திகதி, கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.