காதலியை பாலியல் தொழில் செய்யவிட்டு விளக்கு பிடித்த காதலன்?

இணையத்தின் ஊடாக விளம்பரங்களை மேற்கொண்டு, காதலியை வைத்து பாலியல் தொழில் செய்துவந்த காதலன் மற்றும் காதலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு தெஹிவளை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அறை ஒன்றினை வாடகைக்கு பெற்று இந்த ஜோடி இந்த செயலினை செய்து வந்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

ஹோமாகம பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவருக்கும், வெள்ளவத்தையை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய யுவதியும் காதலித்து வந்துள்ளனர்.

இதன் போது இவர்கள் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு காதலன்  இந்த விபரீத யோசனையை முன்வைத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் 15 வயது சிறுமி இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.

இந்த சம்பவத்தை அறிந்த ஹோமாகம இளைஞன், தன்னுடைய காதலியை வைத்து பணம் சம்பாதிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

இது பற்றி காதலியிடம் சொன்ன போது, காதலி தயக்கம் காட்டின போது காதலன் நம்பிக்கையூட்டினார்.

“வருபவர்களோடு நீங்கள் உல்லாசமாக இருக்க தேவையில்லை. அவர்கள் அறைக்கு வந்ததும், குளித்து விட்டு வருமாறு குளியல் அறைக்கு அனுப்புங்கள். அந்த நேரத்தில் பொலிஸ் அதிகாரி போல நான் உள்நுழைந்து விடுவேன்.

அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகைகளை பறித்து விட்டு அனுப்பி விடுவோம். அவர்கள் வெட்கத்தை விட்டு பொலிஸ் நிலையம் செல்ல மாட்டார்கள்“ என நம்பிக்கை ஊட்டினார்”

காதலியை சமரசப்படுத்தி சில நாட்களில் தெஹிவளை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இரு அறைகளை வாடகைக்கு எடுத்தனர்.

சில நாட்கள் கழித்து, 23 வயது யுவதி “பாலியல் சேவை“ செய்ய காத்திருப்பதாக தெரிவித்து காதலியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் பெண்களின் மங்கலான புகைப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டனர்.

முதலாவது நபரிடம் தொழில்

இதன்போது, பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து அழைப்பு வந்தது.

தனது வயது 50 என அவர் கூறியபோது, “ இங்கே வந்தால் உங்களுக்கு நல்ல அனுபவம் ஒன்று கிடைக்கும் சேர். இங்கே முதலில் வந்து பாருங்கள் சேர்” என பெண் ஒருவர் பேசினார். மாலை 4 மணிக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

மாலை 4 மணிக்கு யுவதியின் அறைக்கு வந்த மேலாளர் உணர்ச்சி வசப்பட்டு, யுவதியை கட்டியணைத்து முத்தமிட முயன்றார்.

இதன்போது போய் குளித்து விட்டு வந்து என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என கூறி யுவதி மறுத்து விட்டார்.

உடனே குளியலறைக்கு சென்றார் குளித்து விட்டு, துண்டு ஒன்றை  சுற்றிக்கொண்டு, வெளியே வந்தார்.

அதன்போது அந்த யுவதிக்கு, முன்னால் ஒரு இளைஞன் விசாரித்தபடி நின்றான். அந்த இளைஞன் யார் என மேலாளர் கேட்டார். “நான் தெஹிவளை ஓஐசி. நீங்கள் யார்?“ என வினாவினான்.

உல்லாசம் அனுபவிக்க வந்தவருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.

“என்னை போலீசுக்கு அழைத்து செல்ல வேண்டாம், நான் ஒரு குடும்பகாரன், நீங்கள் கேட்பதை நான் தருகிறேன்.” என மன்றாடினார்.

அவரிடம் இருந்த 35,000 ரூபாவையும் அவரது திருமண மோதிரம் என உல்லாசத்தற்கு வந்தவரிடமிருந்து எல்லாவற்றையும் உருவிவிட்டே அனுப்பினார்.

முதல் வியாபாரம் வெற்றிகரமாக அமைந்ததால், அவர்கள் தொடர்ந்து இந்த மோசடி வியாபாரத்தை நடத்தினார்கள்.

இவ்வாறு தொடர்ந்து பலரை ஏமாற்றி கொள்ளையடித்தனர்.

பொலிசில் சிக்கியது எப்படி?

ஓமானில் வேலை செய்த ஒருவரும் இவர்களது வலையில் சில வாரங்களுக்கு முன்னர் வீழ்ந்தார்.

அவரும் தனது உடைமைகளை இவர்களிடம் இழந்தார்.

இதனால் கடும் கோபமடைந்த அவர் வெட்கத்தை விட்டு பொலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த ஜோடியை தெஹிவளை பொலீசார் கைது செய்தனர்.

உல்லாசத்திற்கு அழகிய யுவதிகள் இருப்பதாக கூறி, பலரை அழைத்து வந்து பணம் பறித்ததை சந்தேகநபர்கள் ஏற்றுகொண்டனர்

இவர்களிடம் மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் என பலர் பணத்தை பறிகொடுத்துள்ளனர். ஆனால் அவமானத்தால் அதை அவர்கள் யாரிடமும் சொல்லவில்லை.

தெஹிவளை அடுக்குமாடிக்கு சென்று ஆசை வலையில் சிக்கி, சென்று, பணத்தை இழந்தவர்கள் வெட்கத்தை விட்டு, பொலிஸில் புகார் செய்து  நீதியை பெற முடியுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபச்சார சேவை பெற வந்த ஆண் மற்றும் 4 பெண்கள் கைது!

பாலியல் தொழில் செய்துவந்த ஏழு பெண்கள் கைது!

இலங்கையின் பிரபல இடத்தில் உறவு கொண்டவர்கள் சிக்கினார்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.