சாகசப் பெண்மணியை சந்தித்த நடிகர் அஜித்!

மோட்டார் சைக்கிளில் உலகம் முழுக்க தனியாக பயணம் செய்த சாகசப் பெண்மணி மாரல் யசார்லூவை (Maral Yazarloo) நடிகர் அஜித் (Ajith) டெல்லியில் சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விரைவில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் ஹீமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில், ‘வலிமை’ படத்தில் இடம்பெறும் பைக் சாகசக் காட்சிகளுக்காக படக்குழு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதிவரை ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு, படத்தில் மட்டுமல்லாமல் தனியாகவும் அஜித் பைக்கில் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

அத்தோடு, சென்னை வந்தவுடன் ஹைதராபாத்திலும் அஜித் நடிகர் நவ்தீப்புடன் பைக் ரேஸில் கலந்து கொண்டார். அந்தப் புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில், நடிகர் அஜித் தற்போது டெல்லி சென்றுள்ளார்.

அங்கு தாஜ்மஹாலில் அவர் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் சூழலில், அஜித் உலகம் முழுவதும் பைக்கிலேயே தனியாக பயணம் செய்த Maral Yazarloo-வை டெல்லியில் சந்தித்து உரையாடினார்.

இதுவரை 7 கண்டங்களையும் 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய Maral Yazarloo தற்போது டெல்லி வந்துள்ளார். எதிர்காலத்தில் பைக்கிலேயே உலகம் முழுக்க பயணம் செய்ய திட்டமிட்டுள்ள அஜித், அவரது ஆலோசனைகளையும், டெல்லி அனுபவத்தையும் கேட்டறிந்தார்.

இந்தப் புகைப்படத்தையும் தகவலையும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.