நனோ நைட்ரஜன் உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தினை அதிகளவில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்திற்கு அனுமதியை பெறுவதற்கென நேற்று (வெள்ளிகிழமை) காலையில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தோடு, கூட்டு எருவை இலவசமாக விநியோகிப்பதற்கும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.