கள்ள காதல், கணவனை கொலை செய்த மனைவி!

தூக்க மாத்திரையை பாலில் கலந்து கொடுத்து தலையணையால் தனது கணவனின் முகத்தை அழுத்தி கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இரத்தினபுரியில் கிரிவெல்தலாவ பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது

குறித்த இளம்மனைவி ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி வழமைபோலவே ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்துள்ளார்.

இதன்போது குறித்த நிறுவனத்திற்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததையடுத்து குறித்த பெண் ஒன்றின் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வீட்டுற்கு சென்ற போது கணவர் சடலமாகக் கிடந்தார்.

எனினும் அப்பன் கத்தி ஊரினை கூப்பிடாமல் தனது கணவன் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக அக்கம் பக்கத்துக்கு கூறியுள்ளார்.

இதனால் சடலத்தை பார்ப்பதற்கு அக்கம் பக்கத்தில் யாரும் வராத நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் இரத்தினபுரி வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்தனர் அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் குறித்த நபர் கொரோனா தொற்றினால் மரணிக்கவில்லை எனவும் செயற்கை மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்ததாகவும் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது கடந்த 19ஆம் தேதி கணவனுக்கு பாலில் 6 தூக்க மாத்திரைகள் கலந்து கொடுக்கப்பட்டமை தெரியவந்தது.

இதைக் குடித்த கணவர் சற்று நேரத்தில் தூங்கியுள்ளார்.

இதன் போது உடனடியாக தனது கள்ளக்காதலுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்தவுடன் இவரும் சேர்ந்து கணவன் படுத்திருந்த அறைக்குச் சென்று கொலை செய்துள்ளனர்.

தூக்கத்தில் இருந்த கணவனின் கால்களை கள்ளக்காதலன் இருக்கமாக பிடித்துக் கொள்ள மனைவி தனது அவனது முகத்தில் தலையணையை வைத்து மூச்சுத் திணறச் செய்துள்ளார்.

அதன் பின் கணவர் உயிரிழந்ததை அடுத்து அதுபோலவே ஆடைத் தொழிற்சாலைக்கு குறித்த பெண் வேலைக்கு சென்றுள்ளார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிபவர் கள்ளக்காதலன் என தெரியவந்துள்ளது.

தனது கணவன் தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்துவதாக மேற்பார்வையாளரின் கவனத்துக்கு அப்பெண் கொண்டுவந்துள்ளார்.

அதுவே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. எனினும், அக் காதலுக்கு காதலியின் வீட்டார் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணும் மேற்பார்வையாளரும் சேர்ந்து, மருந்தகங்களில் ஒவ்வொரு தூக்க மாத்திரையாக ஆறு மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு 8வயதில் பிள்ளை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணவனின் அனுமதியோடு மனைவியை பலாத்காரம் செய்த சாமியார்!

வவுனியாவில் நிர்வாணமாக வரும் மர்ம நபர்கள்! பெண்களை கட்டியணைத்து சில்மிசம்!

பாதிரியாரால் கர்ப்பமாகிய 15 வயது சிறுமி! தற்போது எடுத்த முடிவு!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.