முதலிரவில் லண்டன் மாப்பிளையால் கடுமையாக தாக்கப்பட்ட யாழ் பட்டதாரி மனைவி!

யாழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடந்த கலியாணம் ஒன்று விவாகரத்து நிலைக்கு சென்றுள்ளது. யாழ் தீவகப்பகுதியைச் சேர்ந்த லண்டனில் நிரந்தர குடியுரிமையுள்ள 36 வயதான உதயகுமார் (பெயர் மாற்றம்) என்பவருக்கும் யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 27 வயதான யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான சுபாசினி( பெயர் மாற்றம்) என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக வலிகாமம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஜாதகம் பார்த்து கலியாணத் தரகர் மூலமாகவே குறித்த திருமணம் நடத்தப்பட்டது.

மாப்பிளை உதயகுமார் மற்றும் அவரது லண்டன் மற்றும் கனடாவிலிருந்து வந்த சகோதரிகள் கொக்குவில் பகுதியில் நாள் வாடகைக்கு மாப்பிளை வீட்டுக்கான வீடு ஒன்றை பெற்றே குறித்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந் நிலையில் திருமணமான அன்று இரவு 10 மணியளவில் மாப்பிளை தரப்பால் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் வைத்து உதயகுமார் மனைவி சுபாசினியை தாக்கியதாகத் தெரியவருகின்றது.

சுபாசினி அறைக்குள் வைத்து உதயகுமாரால் கடுமையாகத் தாக்கப்பட்ட போது சுபாசினி கத்திக்குழறியுள்ளார்.இருப்பினும் அறைக்கதவு மூடப்பட்டிருந்ததால் வீட்டில் இருந்தவர்களால் நிலைமை என்ன என்பதை அறியமுடியாது போய்விட்டது. இரவிரவாக சுபாசினியின் அழுகுரல் கேட்டவண்ணம் இருந்ததால் அதிகாலை 5 மணியளவில், மாப்பிளைத் தோழனாக அவர்களது வீட்டில் தங்கியிருந்த சுபாசினியின் ஒன்றுவிட்ட தம்பி இது தொடர்பாக சுபாசினியின் பெற்றோர் மற்றும் சகோதரங்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

விடியற்காலையிலேயே சுபாசினியின் உறவுகள் மாப்பிளை வீட்டுக்கு வந்துள்ளார்கள். விடியற்காலையிலேயே சுபாசினியின் உறவுகள் வந்தால் குழப்பிப் போன உதயகுமாரின் உறவுகள் சுபாசினி இரவிரவாக கத்தியது தொடர்பாக கருத்தை கூறாது இருந்ததுடன் இருவரும் வெளியே வந்த பின்னர் இது தொடர்பாக கேட்கலாம் என இருந்ததாக கூறியுள்ளார்கள்.

சுபாசினியும் உதயகுமாரும் தங்கியிருந்த கதவு அந் நேரம் திறக்கப்படவில்லை. காலை 7 மணியளவில் அறைக்கதவைத் திறந்து உதயகுமார் வெளியே வந்துள்ளார்.அவரிடம் எதுவுமே கேட்காது சுபாசினியின் சகோதரி அறைக்குள் நுழைந்து பார்த்த போது சுபாசினி கன்னம் வீங்கிய நிலையில் அரை குறை ஆடைகளுடன் உடலில் பெல்ட் போன்றவற்றால் தாக்கப்பட்ட காயங்களுடன் காணப்பட்டுள்ளார். சகோதரியைக் கண்டவுடன் கத்திக் குழறியுள்ளார்.

இதன் பின் குறித்த வீடு ரணகளமானது.முதல்நாள் கலியாண வீடாக காட்சியளித்த வீடு சண்டைக்களமானது. சுபாசினிக்கு திருமணத்துக்கு முன்னர் காதலன் இருந்துள்ளதாக எழுந்த சந்தேகமே இந்த சண்டைக்கு காரணமாக இருந்துள்ளது. திருமணத்துக்கு முன்னர் சுபாசினிக்கு பேஸ்புக் கணக்கு இருந்துள்ளது. அத்துடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்த பின்னர் லண்டனில் நின்ற உதயகுமாருடன் தொடர்ந்து வட்சப் மற்றும் வைபர் இலக்கங்கள் ஊடாக சுபாசினி கதைத்து வந்துள்ளார்.

திருமணத்திற்கு முதல்நாள் சுபாசினி தனது பேஸ்புக் கணக்கை அழித்ததுடன் வட்சப், வைபர் போன்றவை தொழிற்பட்ட தொலைபேசி இலக்கத்தையும் டிஅக்ரிவேட் செய்துள்ளதுடன் குறித்த தொலைபேசி இலக்கத்திலிருந்து நேரடியாக தொடர்பு எடுக்க முடியாதவாறு சிம்மையும் சேதமாக்கிய பின்னரே திருமணம் முடித்துள்ளார். இது தொடர்பாக முதலிரவு அறைக்குள் நடந்த வாக்குவாதமே சுபாசினி மீது உதயகுமார் தாக்குதல் நடாத்துவதற்கு காரணமாக இருந்துள்ளது.

சுபாசினியின் உறவுகள் சுபாசினியை உடனடியாக தமது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிசிலும் முறையிட்டுள்ளார்கள். பொலிசாரால் உதயகுமார் விசாரிக்கப்பட்டுள்ளார். தான் லண்டனில் இருக்கும் போது சுபாசினியிடம் மனம் விட்டு கதைத்ததாகவும் உனக்கு காதல் தொடர்புகள் இருந்தால் வெளிிப்படையாக கூறுமாறு தான் சுபாசினியைக் கேட்டதாகவும், ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என சுபாசினி சொன்னதாகவும் மாப்பிளை பொலிசாருக்கு கூறியுள்ளார்.

அதன் பின்னர் சுபாசினிக்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்களின் கட்டுப்பாட்டை, தனக்கு முதலிரவு அன்று தரவேண்டும் என தான் கேட்டதுடன், தானும் தனது பேஸ்புக் மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்களின் கட்டுப்பாட்டை தருவேன் என தாக் கூறியதாகவும் உதயகுமார் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். பேஸ்புக் மற்றும் வட்சப் போன்றவற்றில் அழித்த தகவல்களையும் தன்னால் எடுக்க முடியும்.

எனவே பொய் ஏதும் கூறது உனது காதல் தொடர்புகள் இருந்தால் கூறினாலும் நீதான் எனது மனைவி என சுபாசினுக்கு தான் தெரிவித்ததாகவும், அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்தே சுபாசினி தன்னை திருமணம் செய்ததாகவும், ஆனால் முதலிரவு அன்று பேஸ்புக் மற்றும் அனைத்து சமூகவலைத்தளங்களையும் சுபாசினி அழித்துவிட்டதால் ஏற்பட்ட கோபத்திலேயே தான் அவளுக்கு அடித்ததாகவும் உதயகுமார் கூறியுள்ளார்.

சுபாசினி கொடுத்த வாக்குமூலத்தில், உதயகுமார் முதலிரவு அறைக்குள் நுழைந்த போதே கடும் மதுபோதையில் இருந்ததாகவும், தன்னுடன் ஆவேசமான முறையில் உறவு கொண்டுவிட்டு, அதன் பின்னரே தன்னுடன் சண்டைக்கு வந்ததாகவும் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

தான் தனது இளைய சகோதரியின் தொலைபேசியிலேயே பேஸ்புக் மற்றும் வட்சப் போன்றவற்றை பாவித்து வந்ததாகவும் அது தொடர்பாக தான் ஏற்கனவே உதயகுமாருக்கு கூறியிருந்ததாகவும் ஆனால் தனது பேஸ்புக் மற்றும் ஏனையவற்றின் பாஸ்வேட்டுக்களை தரச் சொல்லி தன்னை தாக்கியதாகவும் சுபாசினி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆனால் குறித்த பேஸ்புக் கணக்கை தான் திருமணம் முடித்த அன்றே தனது இளைய சகோதரியே அழித்துவிட்டதாகவும் தான் உதயகுமாருக்கு கூறியும் உதயகுமார் அதனைக் கேட்கும் நிலையில் இல்லாது தன்னை கடுமையாகத் தாக்கியதாக சுபாசினி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந் நிலையில் உதயகுமார், சுபாசினி தரப்பைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் இருவரையும் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவருகின்றது. சுபாசினியில் சந்தேகம் இருந்திருந்தால், அவளுடன் உறவு கொள்ளாது அவளை விசாரித்த பின்னர் உதயகுமார் அவளுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் எல்லாவற்றையும் முடித்த பின்னர் சுபாசினியை தாக்கியது கேவலமான செயற்பாடு என உதயகுமார் தரப்பைச் சேர்ந்தவர்கள் உதயகுமாரிடம் கூறியுள்ளதுடன் சுபாசினி தரப்பைச் சேர்ந்தவர்களையும் சமாதானமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அதுவரை பொலிசாரின் மேலதிக நடவடிக்கையை நிறுத்துமாறு இருதரப்பைச் சேர்ந்தவர்களும் பொலிசாரைக் கேட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.