யாழ் வாள்வெட்டு குழு, புதுக்குடியிருப்பில் பதுங்கிய இருவர் கைது – வாகனமும் மீட்பு

சில நாட்களுக்கு முன்னர் யாழ் தெல்லிப்பழை பகுதியில் வான் ஒன்றில் வந்து வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெல்லிப்பழையில், இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி பின் அங்கிருந்து, ஹயஸ் வாகனத்தில் KKS வீதியில் தப்பியோடி மல்லாகம் பகுதியில், வன்முறையில் ஈடுபட்டதோடு வாள்களை காட்டி வீதியில் சென்றவர்களை அச்சுறுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் மல்லாகம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு உடனடியாக, அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வன்முறை கும்பல் வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர்.

இதன்போது தப்பியோடிய வாகனத்தினை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும், வன்முறை கும்பல் தப்பியோடி இருந்தது.

இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வாக்கு மூலங்கள் பதிவு செய்த பின் அவர் விடுவிக்கப்பட்டு இருந்தார்.

பதுங்கிய இருவர் கைது

அத்தோடு, வாள் வெட்டிற்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த (CCTV) கமரா பதிவுகளின் மூலமும், வன்முறை கும்பல் பயணித்த வாகனத்தை அடையாளம் கண்டனர்.

அதன் அடிப்படையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , வாகனத்துடன் , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் , பதுங்கி இருந்தப்பதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வாகனத்தை மீட்டதுடன் , அங்கு பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை குறித்த வன்முறை சம்பவமானது , யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் இரண்டு வன்முறை கும்பலுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியே என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.