மட்டக்களப்பு டிப்பர் விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமொன்றும் மோதியே விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி – சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுள்ளார்.

விபத்தில் குழந்தை, பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையிலேயே விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.