புத்தூர் சந்தியில் வாளுடன் நின்றவர் கைது!

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன், வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (12) காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால்  பொலிஸார் திருட்டுச் சம்பவமொன்று தொடர்பான தேடுதல் நடவடிக்கைக்காக சென்றுகொண்டிருந்தவேளை குறித்த சந்தேகநபர் புத்தூர் சந்தியில் வாளுடன் நின்றுள்ளார். இதன்போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.