யாழ் குடாரப்பில் கரையொதுங்கிய புத்த தொப்பம் : உண்மை நிலவரம் என்ன?

யாழ்ப்பாணம் குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட தொப்பம் ஒன்று நேற்று திங்கட்கிழமை கரை ஒதுங்கியது. இதன் உண்மை தன்மையை இந்த பதிவு ஆராய்கிறது.

கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன் , உடுத்துறை மற்றும் நாகர்கோவில் ஆகிய கடற்கரைகளில் படகு, மிதவை உள்ளிட்ட பொருட்கள் கரையொதுங்கி வருகின்றது.

அத்தோடு இந்த தொப்பங்கள் குறித்து சிலர் சந்தேக பதிவுகளையும் பதிவிட்டிருந்தனர்.

இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து போன்ற பெளத்த தென்கிழக்காசிய நாடுகளையும் இலங்கை இந்தியா ஆகிய நாடுகளிற்கும் இடையே பெருங்கடல் மாத்திரமே காணப்படுகிறது.

அவர்களது சமய கலாச்சார நிகழ்வுகளின் படி இவ்வாறான தொப்பம் பெளர்ணமி நாளில் கடலில் செய்து விடுவது ஒரு வழக்கமாக உள்ளது.

அவ்வாறு கடலில் விடப்படுகின்ற தொப்பங்கள் இலங்கையின் கரையோர பகுதியிலோ அல்லது இந்திய கரையிலோ ஒதுங்குகிறது.

கீழே உள்ள படம் இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியில் கரையொதுங்கிய தொப்பமாகும். அந்த தொப்பத்தில் புத்தர் சிலைகள் சிலவும் காணப்பட்டன.

ஆகவே கரையோதுங்குகின்ற இந்த தொப்பங்கள் குறித்து எந்த விதமான சந்தேகங்களும் தேவையில்லை. கடலில் விடுகின்ற பொருட்கள் ஏதோ ஒரு இடத்தில் கரையொதுங்கும். அதேபோலத்தான் இந்த தொப்பமும் யாழ் குடரப்பு பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

Rathnasigkam Muraleetharan என்பவர் தனது முகநூல் பதிவில் :”அண்மைய நாட்களில் வடமராட்சிகிழக்கு கரையோரங்களில் கரையோதுங்குபவைகளை பாக்கும்போது ஏதோ ஒரு சம்பவம் இடம்பெறப்போகின்றதுபோல் உள்ளது வடமராட்சிகிழக்கின் சமூகசெயற்பாட்டாளர்களே விழிப்பாய் இருங்கள் ‘ என பதிவிட்டிருந்தார்.

அதற்கு சில நண்பர்கள் பதிவிட்ட கருத்துக்கள்:

செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸ் இல் எம்மை பின் தொடருங்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.