புத்தாண்டு கொண்டாட்ட சென்ற இரு பெண்கள் பலி!

புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றி சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று (14) பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா தொம்பே புவக்வத்த பகுதியை சேர்ந்த எச்.எம். கமலாவதி (70) மற்றும்  சிரியாவதி (51) ஆகிய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.