பொங்கு தமிழுக்கு அகவை 23

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

தமிழர்களின் மரபு வழி தாயகம், தன்னாட்சி சுய நிர்ணய உரிமை ஆகியவற்றை பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் 2001 ஆம் ஆண்டு பொங்கு தமிழ் பேரணி மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று மதியம் 12 மணியளவில் குறித்த நினைவு தினம் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவு தினத்தில் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மா.இளம்பிறையன், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற பொங்குதமிழில் தமிழ் மக்களின் அபிலாசைகளான, சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், என்பன  பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.