உறவு கொள்ளாமல் கர்ப்பமான 13வயது சிறுமி, பரிசோதனைக்காக கொழும்புக்கு!

உடலுறவு கொள்ளாமல் கர்ப்பமானதாக சொல்லப்படும் 13 வயது சிறுமி மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குருணாகல், ஹெட்டிப்பொல பிரதேசத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமியே இவ்வாறு கர்ப்பமாகியுள்ளார்..

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்ட போதும் இது குறித்து எவ்வித தகவலும் கிடைக்காமையினால் மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் வயிற்று வலியினால் அவதிப்பட்டுள்ள நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் வைத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக உள்ள விடையம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மேலதிக பரிசோதனைகளில் பாதிக்கப்பட்ட சிறுமி உடலுறவு கொண்டதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லையென வைத்தியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.