கனேடிய பெண்ணுக்கும் குழந்தைக்கும் நேர்ந்த துயர சம்பவம்! கலங்கும் கணவர்

ஆல்பர்ட்டாவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு சமீபத்தில் தான் குடிபோன அந்த குடும்பத்தில், காதல் மனைவியையும் அன்புக் குழந்தையையும் பறி கொடுத்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Cody McConnell, அவரது மனைவி Mchale Busch (24) அவர்களது 16 மாதக் குழந்தையான Noah McConnell ஆகியோர் Hinton என்ற இடத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் குடியேறினார்கள்.

இந் நிலையில், கடந்த வியாழக்கிழமை, Mchaleம் குழந்தை Noahவும் திடீரென காணாமல் போனார்கள். அதன் பின்னர், வெள்ளியன்று, இருவரது உயிரற்ற உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், குற்றவாளி அவர்கள் வாழ்ந்த அதே அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்த Robert Keith Major (53) என தெரியவந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேக நபரான Robert பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட ஒரு நபர் என் கூறப்படுகின்றது. ஆனால், தாங்கள் ஒரு பாலியல் குற்றவாளி வாழும் அதே அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாழ்கிறோம் என்பது Cody குடும்பத்தினருக்கு தெரியாது.

அது தெரியாததால் தன் காதல் மனைவியையும் அன்புக் குழந்தையையும் பறி கொடுத்து தவிக்கின்றார் Cody. மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என Cody பொலிசாரிடம் புகாரளிப்பதற்கு முன்பே அவர்களை கொலை செய்து விட்டிருக்கிறான் Robert என்பது இப்போது தான் Cody க்கு தெரியவந்துள்ளது.

இந் நிலையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட அவன் மீது இரண்டு கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் உடல்களை அவமதித்த குற்றச்சாட்டு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. Robert பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பது பொலிசாருக்குத் தெரியும் என்ற போதும், அவன் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஒரு வேளை குறித்த நபர் தொடர்பில் அப்படித் தெரிந்திருந்தால், என் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்றியிருப்பேன் என்று கூறும் Cody, தாங்கள் குடிபுகும் வீடுகளில் பாலியல் குற்றவாளிகள் உள்ளார்கள் என்பது தெரியும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என கூறுகின்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.