யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு விஜயம் செய்த துணை தூதர்

(LBC Tamil) யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை விஜயம் செய்தார்.

இதன்போது யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் உட்பட கல்வி துறையில் கூட்டுத் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

LBC lankasri JVP Tamil News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.