சூயார்வின் 39-வது படமான ‘ஜெய் பீம்’ ரிலீஸ் திகதி அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். இப் படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப் படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப் படம் உருவாகியுள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப் படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந் நிலையில், ஜெய் பீம் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப் படம் நவம்பர் 2-ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதே போல், கடந்தாண்டு தீபாவளியையொட்டி சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.