இயற்கையை அழித்தால் அது நம்மை ஒரு நாள் அழிக்கும்!

30 வருடத்திற்கு முந்திய கறுப்பு வெள்ளை சினிமா காலத்தில் வெளியாகியும் தற்போது கூட மறக்க முடியாத படம் நெஞ்சம் மறப்பதில்லை எனும் திரைப்படம்.

இதே படத்தின் பாணியில் இப்பொழுது இயக்குநர் ஸ்ரீ கண்டன் என்பவர் எடுத்து வரும் படம் வனம்.

இது மறுபிறவியைப் பற்றிய பேண்டஸி படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

60 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஜமீன்தார் ஒருவரின் வாழ்க்கையையும், தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் சம்பங்களையும் சேர்த்து திரில்லர் படமாக உள்ளது.

வனம் திரைப்படத்தில் கதாநாயகனாக வெற்றி, கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இயற்கையை நாம் அழித்தால் அது நம்மை ஒரு நாள் அழிக்கும் என்பதனையே இந்த திரைப்படம் விளக்குகிறது.

இன்றைய காலகட்டத்தில் அறிவியல், மற்றும் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால் வனம் படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.