மீண்டும் தனுஷுடன் இணையும் கென் கருணாஸ்!

‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்த கென் கருணாஸ், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

நடிகர் தனுஷின் 44-வது படம் ‘திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவகர் இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந் நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப் படத்தில் நடிகர் கருணாஸின் மகன் கென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் கருணாஸ், கென் உடன் தனுஷ் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவெ வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்த கென் கருணாஸ், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.