பவர் ஸ்டார் சீனிவாசன் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதி!

தமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பவர் ஸ்டார் சீனிவாசனை பிரபலமாக்கியது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், தற்போது ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப் படத்தில் அவர் வனிதாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந் நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை படக்குழுவினர் உடனடியாக மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.